விமானத்தில் புறப்பட்ட நபர் நடுவானில் மரணம்!

குவைட்டில் இருந்து இந்தியா செல்லும் வழியில் இலங்கை வந்திருந்த ஒருவர் விமானத்திலேயே உயிரிழந்த சம்பவம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

A320neo_4

மூத்தன் முருகன் (52) என்ற இந்த நபர், குவைட்டில் பணிபுரிந்து வந்தவர். தமிழகத்தைச் சேர்ந்த இவர், விசாக் காலம் முடிவடைவதையடுத்து தமிழகம் செல்லவிருந்தவர்.

குவைத்தில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான யு.எல்.230 விமானத்தில் புறப்பட்ட இவரது உயிர், இன்று (10) காலை சுமார் ஆறரை மணியளவில், கட்டுநாயக்கவில் தரையிறங்க முன்னரே பிரிந்தது.

விமான நிலைய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட இவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.