இன்றைய ராசிபலன் (11/10/2017)

  • மேஷம்

    மேஷம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப் பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. வியா பாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள்-. குடும்பத்தில் நிம்மதி உண்டு. புதியவர்கள் நண்பர்களா வார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோ கத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

  • கடகம்

    கடகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச் சல் அதிகரிக்கும். சொந்தபந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர் கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர் கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிறப்பான நாள்

  • கன்னி

    கன்னி: எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர் கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங் களை உணர்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • துலாம்

    துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மனப்போர் நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் வரும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போங்கள். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களு டன் சச்சரவு வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர் கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • மகரம்

    மகரம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண் பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளிடம் குவிந்துக் கிடக்கும் திறமைகளை இனம் கண்டறிந்து வளர்ப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.

  • மீனம்

    மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.