கோல்கேட் என்று தமிழில் எழுதுகின்றார்கள். இது எவ்வளவு எவ்வளவு நாட்களுக்கு இருக்க போகிறது என்று தெரியவில்லை.
ஆனால், தற்போது தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நமது ஊர் தயாரிப்புகளான மசாலா நிறுவனகள் எல்லாம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் பெரிய எழுத்துகளில் அச்சிடுகின்றார்கள்.
தமிழைத் தேடிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. அதேபோல மளிகைக் கடைகளில் நமது பாசிப்பருப்பு, உளுந்து என பருப்பு வகைகளின் பெயர்கள் மறக்கடிக்கப்பட்டு வருகின்றன.
அரடு தால், மூங் தால் என்று இந்திப் பெயர்களைப் பேசத் தொடங்கி விட்டார்கள். 1932 ஆம் ஆண்டு ஜப்பானில் பயணித்து ஜப்பான் என்ற தலைப்பில் ஏ.கே. செட்டியார் எழுதிய பயண நூலில் சொல்கிறார்.
அங்கே எந்த அயல்நாட்டுப் பொருளைச் சந்தையில் விற்பதாக இருந்தாலும், அதற்கான விளக்கங்களை ஜப்பானிய மொழியில் அச்சிட்டபிறகுதான், விற்க முடியும்.
ஆனால், இன்று வரையிலும் இங்கே எந்தப் பன்னாட்டு நிறுவனப் பொருட்களிலும் தமிழில் அச்சிட்டது இல்லை.
இப்போது இந்த நிறுவனத்திற்கு மட்டும் இந்த கரிசனம் வரக்காரணம் எல்லாம் வியாபார தந்திரம் தான்.
தமிழர்களிடையே மொழிப்பற்று அண்மைய காலங்களாக அதிகரித்து வருகின்றது. ஜல்லிக்கட்டில் தொடங்கிய தமிழ் உணர்வு மீண்டும் கொதித்தெழும்ப ஆரம்பித்து விட்டது.
அதனை கருத்தில் கொண்டே தமிழில் பெயர் அச்சடித்தால் தமிழர்கள் தானாகவே தேடி வருவார்கள் என்ற வியாபார உக்தியை கையில் எடுத்துள்ளது.
தமிழ் வளர்ச்சித்துறை ஒரு நோட்டீஸ் விட்டால் அனைத்து நிறுவனங்களும் மொழிபெயர்த்துப் போடுவார்கள்.
ஆனால், அவன் கோபித்துக் கொள்ளக் கூடாது என்று நாம் அஞ்சுவதுதான் தமிழ் இப்படி வியாபார பொருளாக இருக்க காரணம்.