வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படித்து வந்த விக்ரம் மகன் துருவ் விக்ரமை சினிமாவில் அறிமுகம் செய்ய கடந்த ஆண்டே முடிவெடுத்து விட்டார். அதனால் அவருக்கு ஏற்ற கதைகளாக தேடி வந்தார். இந்த நேரத்தில் சில டப்மாஸ் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார் துருவ் விக்ரம். இந்த நிலையில், தெலுங்கில் விஜய் தேவரகொன்டா-ஷாலினி பாண்டே ஜோடி சேர்ந்து நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான அர்ஜூன் ரெட்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் விக்ரம் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இப்படத்தை பாலா இயக்க உள்ளார்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிக்க நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. நாயகியாக நடிக்க சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது கமலின் மகள் அக்ஷ்ராஹாசன் நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.