அமைதியாகப் போராட்டம் நடத்திய தம்மை சிறிலங்கா காவல்துறை கைது செய்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடமும், அமெரிக்காவிடமும் முறையிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில் தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிராக அமைதியாகப் போராட்டம் நடத்திய எம்மில் 4 பேரை சிறிலங்கா காவல்துறை கைது செய்துள்ளது, எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குகிறது. என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே ஆகியோரை நோக்கி முறையீடு செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுத் தலையீடுகளுக்கு எதிராக கடுமையாக குரல் கொடுத்து வந்த மகிந்த ராஜபக்ச அணியினர், ஐ.நா மற்றும் அமெரிக்காவின் காலில் தஞ்சமடையத் தொடங்கியுள்ளனர்.