தமிழகத்தில் இப்போது நடக்கும் சம்பவங்களை பார்த்தால் வரலாறு மீண்டும் எம்.ஜி.ஆர் இறந்த பின் நடந்த நிகழ்வுகளை நோக்கி திரும்புகிறது.
அன்றைக்கு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு எல்லாம் சும்மா. இனி ஒரு நாள் சட்ட சபை கூடினாலும் அங்கே ஒரு சம்ஹாரமே நடக்க இருக்கிறது.
அன்றைக்கு ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிளவுபட்டது கட்சி. இன்று எடப்பாடி அணி, தினகரன் அணி என்று பிளந்து நிற்கிறது.
அப்போது சட்டசபையில் மைக், சேர், நாற்காலி என சட்டசபை பர்னிச்சர் பொருட்கள் எல்லாம் பறந்து பறந்து சட்டசபை ரகளை சபையாக மாறிவிட்டது.
பார்த்தார் கவர்னர், ஆட்சியை கலைக்க சொன்னார் மத்திய அரசும் அதை செய்தது.
அதை போலவே தற்போது ரோட்டில் போகும்போது ஒரு அணி மீது மற்றொரு அணி கல் எறிவது இப்பதான் ஆரம்பம் ஆகி இருக்கிறது.
இனி அடுத்தடுத்த நாட்களில் விளைவு வேறு விதமாக இருக்கும். சாராயத்தில் இருந்தே திமுக கட்சி உடன் சம்திங் சம்திங் பங்குகளை பங்கிட்டு கொண்டு தோழமை பாராட்டி வரும் சசிகலா.
அரசியல் வியாபாரத்திலும் திமுகவும் ஒரு பங்குதாரராக இருந்து விட்டு போகட்டுமே என்ற எண்ணம் வந்து விட்டது.
ஒரு புறம் தினகரன் தரப்பு முன்னாள் எம்.எல்.ஏக்களின் குடைச்சல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
மக்கள் எல்லாம் சேர்ந்து ஓட்டுபோட்டது எதற்கு..? பாண்டிசேரி கர்நாடகாவில் தங்கி இருக்கவா..? தொகுதி மக்களுக்கு பல நல்லது செய்து தொகுதியை தக்க வைத்து கொள்வதற்காக தானே.
ஆலமரம் நிழலில் நின்று இலைப்பாரிவிட்டு, மரத்தின் கிளையை வெட்ட நினைத்தால் எப்படி..?
தற்போது திமுகவிற்கு துணை போகும் ஒரு திட்டம் மெல்ல மெல்ல அரங்கேற இருக்கிறது.
அதற்காக தினகரன் தரப்பில் இருந்து ஒரு ரகசிய ஒப்பந்தம் ஒன்று நடந்துள்ளது. அதன்படி, இரட்டை இலையில் நின்று ஓட்டு வாங்கியவர்கள் திமுக ஆட்சி அமைக்க ஆதரிப்பதென்று.
தற்போது மக்களும், அ.தி.மு.க.வினரும் கூட எப்பொழுது ஆட்சியைக் கலைப்பீர்கள் என்று ஸ்டாலினைக் கேட்கும் நிலையில் இருக்கிறார்.
நாங்கள் கொல்லைப்புற அரசியல் செய்யமாட்டோம் என்று ஸ்டாலின் பேசுவது, மக்களிடத்தில் குறிப்பாக இளைஞர்களிடத்தில் தி.மு.க.வின் மீது நற்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக.
இதையெல்லாம் தாண்டித்தான் தினகரன் உடன் ஒரு நல்ல புரிதலோடு திமுக செயல்பட்டு வருகிறது.
தினகரன் தொடர்ந்த ஒரு வழக்கில் கூட தன்னையும் அதில் இணைத்து கொண்டு தற்போது தீர்ப்பை எதிர்நோக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.