அண்மையில் யாழ்ப்பாணத்தின் பிரபல பத்திரிகை ஒன்றில் பெண் மந்திரவாதி ஒருவர் விளம்பரம் செய்திருந்தார். அதில் நினைப்பதை முடித்துத்தரும் சக்தி தன்னிடம் உள்ளதாக தெரிவித்திருந்தார். அச் சாமியார் தொடர்பான சில கபடங்கள் வெளிவந்துள்ளன.
குறித்த மந்திரவாதியின் விளம்பரத்தை பார்த்து பலகொல்ல பிரதேசத்தை சேர்ந்த வீட்டு பணிப்பெண் தனது காதலனை பெற்றுத் தருமாறு விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார்.
மந்திரம் செய்யும் தமிழ் பெண் தனது கணக்கிற்கு 5000 ரூபாய் பணம் வைப்பிடுமாறு பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். பணம் வைப்பிட்ட பின்னர் காதலனை பெற்றுக் கொள்வதற்காக காளி அம்மனுக்கு பூஜை செய்ய வேண்டும் என கூறி அதற்கு பணம் கோரியுள்ளார்.
இவ்வாறு மந்திரம் செய்வதற்கு பணம் பெற்றுக் கொள்வதற்காக பணிப்பெண் தான் பணிபுரிந்த வீட்டில் 670000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை திருடியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து களத்தில் இறங்கிய பொலிஸாரின் நடவட்க்கையில் மந்திரம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கமைய அவருக்கு உதவிய இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி பிரதேசங்களில் தமிழ் மக்களின் பணத்தை இந்த மோசடி செய்துள்ளதாகவும், அவரது கணக்கில் தற்போது 4 லட்சம் ரூபாய் பணம் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.