இருட்டில் தாக்கும் வீரர்கள்… தீர்ப்பு வருவதற்குள் தீர்த்து கட்ட முடிவு..?

தற்போது டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளர்கள் மீது சில அடக்குமுறைகள் ஏவப்பட்டு வருகின்றன.

ttv-edappadi

சட்ட சபை கூடுவது தொடர்பான தீர்ப்பு வருவதற்குள் தினகரன் தரப்பில் இருந்து வரும் எதிர்ப்புகளை எல்லாம் தீர்த்து கட்ட எடப்பாடி தரப்பு முடிவு செய்து விட்டது.

அதன் ஒருபகுதியாக தினகரன் ஆதரவு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. வெங்கடாசலம் கடந்த மாதம் சேலத்தில் கைது செய்யப்பட்டார்.

மேலும் அவருடன் சேர்ந்து, தினகரன் ஆதரவாளர்கள் 10 பேர் பொது மக்களிடம் நோட்டீஸ் வழங்கியதாக கைது செய்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு பகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவான ஏழுமலை சென்ற கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

காரின் கண்ணாடி உடைந்து காயமடைந்த ஏழுமலை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விவகாரத்தில் எடப்பாடி தினகரன் இடையே வார்த்தை மோதல் வெடித்து வரும் நிலையில்,

தினகரன் ஆதரவாளர் மீது தாக்குதல் நடந்திருப்பது தினகரனுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.