5 நாட்கள் பரோல் முடிந்து மீண்டும் இன்று சிறைக்கு திரும்ப இருப்பதால் சசிகலா மிகவும் கவலை அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் தனது கணவரை பார்க்க சசிகலா 15 நாள் பரோல் கேட்டிருந்தார்.
ஆனால், கர்நாடக சிறைத்துறை 5 நாட்களுக்கு மட்டுமே பரோல் வழங்கியது.
இதையடுத்து,6ம் தேதி மாலை கர்நாடக சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தார்.
மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் தனது கணவரை பார்க்க, பரோலில் வெளிவந்த சசிகலாவிற்கு பூக்கள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சசிகலாவை பார்க்க, குறைந்தது 12 அமைச்சர்களும், 20 எம்.எல்.ஏ.க்களும் வருவார்கள். இதனால், தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று தினகரன் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், தினகரனின் ஆதரவாளராக உள்ள இரண்டு எம்பிக்கள் மற்றும் கருணாஸ் எம்.எல்.ஏ. மட்டும் சசிகலாவை சந்திக்க, அவரது வீட்டிற்கு சென்றனர்.
மறுநாள் தனது கணவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்ற போதும், சசிகலாவை சந்திக்க யாரும் வரவில்லை.
இதனால், சசிகலாவிற்கு மிகப்பெரிய பெரிய ஆதரவு இருக்கிறது என்று தினகரன் தரப்பினர் சொன்னது பொய்யாகி போனது.
பரோலில் வெளிவந்த சசிகலாவிற்கும் இது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் போனில் சசிகலா பேசியுள்ளார். ஒரு சிலர் போனை எடுக்கவில்லையாம்.
சசிகலாவிடம் பேசியவர்கள் தினகரனை பற்றி புகார் தெரிவித்ததால், அதுகுறித்த பிரச்சனை அவரது வீட்டில் நடந்துள்ளது.
அதனோடு, சசிகலாவின் உறவினர்கள் இடையே சொத்து பிரச்னை பெரிதாக வெடித்து உள்ளது.
அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வுகள் சசிகலாவை கவலை அடைய செய்துள்ளதாம்.
ஆட்சியும், கட்சியும் தனது கைவிட்டு போன நிலையில், ஆதரவாளர்கள் ஒருபக்கம் ஏமாற்றியதாலும், சொத்துக்காக உறவினர்கள் பிரச்சனை செய்வதாலும் சசிகலா பெரும் சோகத்துடன் சிறைக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.