யார்கிட்ட வேண்டுமானாலும் ரிப்போர்ட் பண்ணிக்கோங்க.!! எடப்பாடிக்கு சவால் விடுத்த அந்த பெண் அதிகாரி யார்?

தலைமை செயலாளர் மீது எடப்பாடி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியதை அடுத்து, புதிய தலைமை செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பேற்றார்.

கிரிஜா வைத்தியநாதனின் நியமனத்தில் பாஜகவின் தலையீடு இருந்ததாக அப்போதே தகவல்கள் வெளிவந்தது.

இந்த சூழலில், முதல்வர் எடப்பாடிக்கும், தலைமை செயலாளருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவாகியிருக்கிறதாம்.

தமிழக அமைச்சர்கள் சிலர், தங்களுக்கு அடிபணியாத, நேர்மையான அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்களாம்.

இதனால், அந்த அதிகாரிகளை மாற்ற சொல்லி தலைமை செயலாளரிடம் எடப்பாடி கூறியிருக்கிறார்.

ஆனால், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அதனை ஏற்கவில்லையாம்.

அதனோடு, சமீபத்தில் சில அதிகாரிகளின் மாறுதல் உத்தரவில் கூட, தலைமை செயலாளர் கையெழுத்து போட மறுத்து விட்டாராம்.

இதனால், எடப்பாடி தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

தலைமை செயலாளரின் பின்புலத்தில் பாஜக இருப்பதால்தான் முதல்வரின் உத்தரவை கூட அவர் மதிப்பதில்லை என்று அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.