அமெரிக்காவின் காற்று மாசுபாட்டை கண்டறிய உதவிய பறவைகள்.

கடந்த நூறு ஆண்டுகளில் பாடும் பறவைகளின் சிறகுகளில் படிந்த மாசு குறித்த ஆய்வானது, மாசுபாடு குறித்த தங்களது முந்தைய பதிவுகளை அறிவியலாளர்கள் திருத்தி அமைக்க வழிவகை செய்துள்ளது.

வானம்பாடி, மரங்கொத்தி மற்றும் சிட்டுக்குருவி உள்ளிட்ட 1300 பறவைகளில் கடந்த நூறு ஆண்டுகளாக படிந்துள்ள கார்பனை அமெரிக்கா ஆய்வாளர்கள் கணக்கிட்டு, ஓர் ஆய்வேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த ஆய்வேடானது, அமெரிக்காவின் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளின் காற்றின் தரம் குறித்து தெளிவான ஒரு சித்திரத்தை தருகிறது.

அதுமட்டுமல்லாமல், பருவநிலை மாற்றம் குறித்த நம் புரிதலையும் இது மேம்படுத்துகிறது.

புகைப்படிந்த நகரங்கள்

புகைக்கரியில் உள்ள ஒரு முக்கியமான கூறு கறுப்பு கார்பன் ஆகும். நிலக்கரி உள்ளிட்ட புதைவடிவ எரிப்பொருட்களை முறையாக எரிக்காததனால் இது உருவாகிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் தொழிற்சாலைகள் விரிவாக்கமடைந்தன. இதன் காரணமாக காற்று மாசடைந்தது. இதனால்,பெரும் பிரச்னைகள் உருவாகின.

வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் எரிக்கப்பட்ட நிலக்கரியானது, நகரங்கள் விரைவாக புகைக்கரியால் சூழ காரணமானது.

வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் எரிக்கப்பட்ட நிலக்கரியானது, நகரங்கள் விரைவாக புகைக்கரியால் சூழ காரணமானது.

வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் எரிக்கப்பட்ட நிலக்கரியானது, நகரங்கள் விரைவாக புகைக்கரியால் சூழ காரணமானது.

புகைக்கரி நகர்புறங்களில் வாழும் மனிதர்களின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கம் செலுத்துகிறது என்பது கடந்த பல தசாப்தங்களாக ஒப்புக்கொள்ளப்பட்டாலும், வெகு சமீப வருடங்களில்தான், பருவநிலை மாற்றத்தில் இது ஏற்படுத்தும் தாக்கத்தினை ஒப்புக்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.

புகைக்கரி காற்றில் வெளியேற்றப்பட்டதும், அது சூரிய ஒளியை உறிஞ்சி, வளிமண்டலத்தின் வெப்பத்தை அதிகரிக்கிறது.

உருகும் இமாலய பனிப்பாறைகளை செயற்கையாக உருவாக்கும் பொறியாளர்கள்

அந்த வெப்பம் நிலத்தை அடையும்போது, பனியும், பனிக்கட்டியும் விரைவாக உருக தொடங்குகின்றன. ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதற்கும், இதற்கும் தொடர்பு உள்ளது.

அமெரிக்காவில் தொழிற்கூடங்கள் மிகுந்து காணப்படும் உற்பத்தி பிராந்தியமான சிக்காகோ, டிட்ரொய்ட் மற்றும் பிட்ஸ்பெர்க் பகுதிகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் எவ்வளவு கறுப்பு கார்பன் வெளியாகியது என்பது குறித்த தரவுகளை கண்டறிய அமெரிக்க ஆய்வாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

ஆனால், இந்த ஆய்வு, நூறாண்டுகளாக எவ்வளவு புகைக்கரி அமெரிக்காவின் இந்த பிரதேசங்களிலிருந்து வெளியாகி இருக்கிறது என்பதை கண்டறிய உதவி உள்ளது.

சிறகுகளில் படிந்த மாசு

ஆய்வாளர்கள் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளில் உள்ள அருங்காட்சியங்களில் தேடி அழைந்து, அங்குள்ள பாடும் பறவைகளின் சிறகுகளில் படிந்துள்ள கறுப்பு கார்பனை அளவிட்டனர். அதாவது, அந்த பாடும் பறவைகள் எல்லாம் வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்தவை, அவை புகை சூழ்ந்த காற்றில் பறந்திருக்கும். அந்த காற்றானது, அதன் சிறகுகளில் படிந்திருக்கும். இதனை ஆராய்வது மூலம், அந்த பகுதிகளில் உள்ள சூழலியல் மாசுப்பாட்டை கணக்கிடலாம் என்பதுதான் அவர்களின் ஆய்வின் நோக்கம்.

ஆய்வாளர்கள் புகைக்காற்று படிந்துள்ள சிறகுகளை, புகைப்படம் எடுத்து, அதில் வெளிச்சம் பாய்ச்சி, எவ்வளவு ஒளி எதிரொலிக்கிறது என்று அளவிட்டனர்.

பறவைகளுக்கு உணவளிக்க இணைந்த கைகள்

புல அருங்காட்சியகம் மற்றும் சிக்காகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்த ஆய்வேட்டின் இணை ஆசிரியர் ஷான் துபே, “நாங்கள் இயற்கை வரலாற்று சேகரிப்பு மையத்துக்குச் சென்றோம். அங்கு நூறு ஆண்டுகள் பழைய பறவைகள் பாடம் செய்து வைக்கப்பட்டு இருந்தன. அவை அழுக்கடைந்து, புகைக்கரி படிந்து இருந்தன.

அதனுடன் ஒப்பிடும்போது, இப்போதுள்ள பறவைகள் சுத்தமாக இருப்பதை கண்டோம். ஏதோ ஒரு காலக்கட்டத்தில் அது தன்னை சுத்தப்படுத்தி இருக்கிறது. அதாவது, இப்போதுள்ள காற்றைவிட அந்த பறவைகள் வாழ்ந்த காலக்கட்டத்தில் காற்று மிக மோசமாக இருந்திருக்கிறது”

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளை அவர்கள் ஆய்வு செய்ததில், அந்த பறவைகள் மீது படிந்துள்ள கறுப்பு கார்பன் அளவு, 1900-களின் முதல் தசாப்தத்தில் உச்சத்தில் இருந்திருப்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

அமெரிக்கா கடுமையான அழுத்தத்தில் இருந்த போது, அங்கு நிலக்கரியின் பயன்பாடு மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. இதனால் அப்போது காற்றின் மாசு குறைவாக இருந்திருக்கிறது என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. இரண்டாவது உலகப்போரின் போது அது மீண்டும் உச்சத்திற்கு சென்றிருக்கிறது. ஆனால், எரிவாயு உள்ளிட்ட எரிப்பொருட்களின் பயன்பாடு பரவலடைந்த பின், நிலக்கரியின் பயன்பாடு குறைந்திருக்கிறது.

அமெரிக்காவில் தொழிற் பிரதேசங்களில் எந்தெந்த காலக்கட்டத்தில் எவ்வளவு காற்று மாசுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது என்ற காலவரிசையை புரிந்துக்கொள்ள இந்த ஆய்வு மிகவும் உதவி புரிந்துள்ளது.

ஷான் துபே கூறுகிறார், “எங்கள் ஆய்வின் இந்த கண்டுபிடிப்பானது, வளிமண்டலத்தில் உள்ள கறுப்பு கார்பனின் அளவு முன்பு நாம் கணக்கிட்டதைவிட அதிக அளவில் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.

நம் முந்தைய பருவநிலையில் இந்த வளிமண்டல கறுப்பு கார்பனின் பங்கு குறித்த தரவுகளை தருகிறது. இதனை புரிந்துக் கொள்வதன் மூலம், நாம் எதிர்கால பருவநிலைகளை மிகத் துல்லியமாக கணிக்கலாம்.”

இந்த ஆய்வு முறையை பிற நாடுகள் ஏற்றுக் கொள்வதன் மூலம், தொழிற்துறையில் நீண்ட பாரம்பர்யம் கொண்ட நாடுகளில் ஏற்பட்டுள்ள சூழலியல் மாற்றத்தை கணக்கிடலாம்.

“நீண்ட தொழிற்துறை வரலாறு மற்றும் நீண்டகால இயற்கை வரலாற்று சேகரிப்புகளை கொண்ட பிரிட்டனில் இந்த ஆய்வை விரிவாக்கும் வாய்ப்புகள் குறித்த உற்சாகத்தில் இருக்கிறோம்,” என்றார் இந்த ஆய்வேட்டின் இணை ஆசிரியரான, சிக்காகோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த கார்ல் ஃப்ல்ட்னர்.