தமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்படும் என்று இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு ஊதிய உயர்வு என்பதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சம்பள உயர்வு 2.57 மடங்கு அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்ச ஊதியம், 6,100 ரூபாயிலிருந்து 15,700 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
அதிகபட்சமாக இருந்த 77 ஆயிரம் ரூபாயிலிருந்து 2.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
பென்சன்தாரர்களுக்கு குறைந்த பட்சம் 7,850 ரூபாயாகவும், அதிகபட்சம் 1,12,500 ரூபாயாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடும்ப பென்சன்தாரர்களுக்கு, 67,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களுக்கான ஊதியம் 30% அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரசுக்கு 14,719 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும் என்றும், அதனை அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது.