கடந்த 2008-ம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் ஆருஷி தல்வர் என்ற 14 வயது சிறுமியும், வீட்டு வேலையாளான ஹேம்ராஜூம்(45) மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து, ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இருவரையும் கொலை செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ கையில் எடுத்து விசாரித்தது. இதில் கொலையை திட்டமிட்டு செய்ததாக ஆருஷியின் தந்தையான பல் டாக்டர் ராஜேஷ் தல்வார், தாயார் நுபுர் தல்வார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் 2013-ம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இதனால் இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் அலகாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கின் விசாரணையில் அனைத்து சாட்சியங்களும் விசாரிக்கப்பட்ட நிலையில் இறுதி தீர்ப்பானது இன்று வெளியாகிறது. இதில் பெற்றோர் தான் உண்மையான குற்றவாளிகளா இல்லையா என்பது தெரியவரும்.