ஹரியானா,பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் மிகவும் பிரபலமாக இருந்தவர் தேரர் சாச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் தற்போது பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று வருகிறார்.
இவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட பின் மிகப்பெரிய கலவரமே ஏற்பட்டது. இதில் 36 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்தை தூண்டியதாக ராம்ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனி ப்ரீத் மீது வழக்கு பதியப்பட்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட ஹனி ப்ரீத் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் அவரிடம் போலீசார் நடத்திய போது, தன் தந்தை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததும், ஹரியானாவின் பஞ்சகுலாவில், கலவரத்தை துாண்டியதை, ஹனிப்ரீத் ஒப்புக் கொண்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
கலவரத்தில் ஈடுபட, சாமியார் ஆதரவாளர்களுக்கு, 1.25 கோடி ரூபாய் ஹனி ப்ரீத் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.