பெற்றோருக்க பணம் அனுப்ப முடியவில்லை என வாலிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
இந்தியாவின் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முருகன்குடியை சேர்ந்த 22 வயதுடைய வேலய்யன் என்ற வாலிபரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்யும் குறித்த இளைஞர் இதே மில்லில் வேலை செய்யும் பெண்ணை காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அதன்பின்னர் புதுமண தம்பதிகள் இருவரும், நூற்பாலையில் உள்ள குடியிருப்பில் தங்கி, வேலைக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மில் குடியிருப்பில் வேலய்யன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குறித்த இளைஞரிடம் பெற்றோர், பணம் கேட்டதாகவும், அவர்கள் கேட்ட பணத்தை வேலய்யனால் அனுப்ப முடியாததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.