இலங்கையர் மூவர் கொண்டு சென்ற தங்கம் பறிமுதல்

இலங்கையர் மூவர் அணிந்திருந்த மற்றும் துணிகளுக்கு இடையில் மறைத்து வைத்திருந்த 1.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் – கோவை விமான நிலையத்தில் வைத்தே குறித்த தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவா விமான நிலையத்தில் இலங்கையர் மூவர் கொண்டு சென்ற தங்கம் பறிமுதல்

கொழும்பிலிருந்து கோவை சென்ற விமானத்தில், விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த மூவரும் அணிந்திருந்த மற்றும் துணிகளுக்கு இடையில் மறைத்து வைத்திருந்த 1.5 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போதே அதிகாரிகள் இதனை பறிமுதல் செய்துள்ளதாக தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுங்க வரி செலுத்தாமையின் காரணமாக இந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உரிய சுங்க வரி மற்றும் அபராத தொகையை செலுத்தினால் மீளவும் நகைகள் கையளிக்கப்படும் என சுங்க திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.