வினோதமான முறையில் அமேசான் நிறுவனத்துக்கு ஆப்பு !!

டெல்லி ரோகினி நகரை சேர்ந்த வேலையில்லா பட்டதாரி சிவம் சோப்ரா(21). தனக்கு இருந்த கடன் தொல்லையின் காரணத்தில் ஒரு புதிய பிசினஸ் தனியாக தொடங்க வேண்டும் என்ற ஆசையினாலும் வினோதமான முறையில் அமேசான் நிருவத்தை ஏமாற்றியுள்ளார்.

image-1._CR0,8,1340,762_

சுனில் சோப்ரா தனக்கு கிடைத்த சுனில் ஜெயின்(38) என்ற நண்பரின் உதவியால் போலியான முகவரியை கொடுத்து போலியான சிம் கார்டுகளை வாங்கியுள்ளார். இவ்வாறு, 144 போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி, விலையுயர்ந்த166 போன்களுக்கு ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளார். பின்னர் மீண்டும் நிறுவனத்துக்கு போன் செய்து அதில் செங்கல் தான் இருந்தது மொபைல்  இல்லை என கூறி பணத்தை திரும்ப பெற்று விடுவார். இதுபோல நிறுவனத்தை ஏமாற்றி இதுவரை மட்டும் 50 லட்சம் ரூபாய் வரை இழப்பீடாக பெற்றுள்ளார்.

தங்கள் மொபைல் போன்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காததால் சந்தேகம்அடைந்து, அமேசான் நிறுவனம் புகார் கொடுத்தது. இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில் போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.