துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் தங்கமணி, மைத்ரேயன் எம்பி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.
அவர்கள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். அதன்படி இன்று மாலை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்கள் டெல்லி சென்றதற்கான காரணம் என்னவென்று பல்வேறு விதமாக கூறப்பட்டு வருகிறது.
ஆனால், இதுவரை வெளியில் வராத புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து எடப்பாடி ஆதரவாளர்கள் கூறியதாவது:
பெங்களூரு சிறையிலிருந்து 5 நாட்கள் பரோலில் வெளியே வந்த சசிகலாவை அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் சந்திப்போம் என்று பேட்டி கொடுத்திருந்தனர்.
ஆனால், சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளால் யாரையும் சந்தித்து பேசவில்லை.
பரோலில் இருந்த போது எதாவது நடவடிக்கை எடுத்திருந்தால் பெரிய பிரச்சினையாகியிருக்கும்.
அதனால், சிறை சென்ற பிறகு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தினகரன் மற்றும் திவாகரனிடம் சசிகலா விரிவாக கூறியுள்ளார்.
சசிகலாவுக்கு பரோல் முடிவடைந்ததால், இன்று சிறைக்கு சென்றுவிட்டார்.
அவரது ஐடியாவின் படி எப்போது வேண்டுமானாலும் தினகரன் அதிரடியில் இறங்க வாய்ப்புகள் இருக்கிறது.
இதனை அறிந்த முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு அனுப்பியுள்ளார்.
அவர்கள் மேலிடத்திடம், சசிகலாவின் திட்டங்களைப்பற்றி விவரித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தவுள்ளனர், என்று கூறுகிறன்றனர்.