யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை 11:00 மணியளவில் நுணாவில் பகுதியில் இடம்பெற்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்