தீபாவளி அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர் சங்கம்.

baf2b52cff4cb3f7beca53619a1901f5தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு பரிசுத் தொகையை அறிவித்து வரும் நிலையில், சினிமா தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தயாரிப்பாளர்களின் குடும்பத்துக்கு பட்டாசும், இனிப்பும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் விஷால் தலைமையிலான அணி பரிசுத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது.

அதன்படி தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை தயாரிப்பாளர் சங்கத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கும்படி தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.