இந்தியாவில் பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்

காஞ்சிபுரம் கோயில் ஒன்றில் கடந்த 10-ம் தேதி ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு, பணம் கொடுத்து சென்னையில் உள்ள தூதரகத்துக்கு அனுப்பினார்கள். இப்போது அவரை காவல்துறையினர் தேடிவருவதால் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது காஞ்சிபுரம்.

பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்

ரஷ்யாவைச் சேர்ந்தவர் இவாஞ்செலின் பெர்ன்கோவ். இவர் கோயில்களைக் காண்பதற்காக கடந்த 8-ம் தேதி ரஷ்யாவிலிருந்து இந்தியா வந்தார். காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களை சுற்றிப்பார்ப்பதற்காக 9-ம் தேதி இரவு 8.15க்கு ரயில் மூலம் காஞ்சிபுரம் வந்தார். கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால், தனது கையில் வைத்திருந்த டெபிட் கார்ட் மூலம் ஏ.டி.எம் ஒன்றில் பணம் எடுக்க முயன்றார். ஏ.டி.எம் பாஸ்வேர்டை மாற்றிப் மாற்றி போட்டதால் ஏ.டி.எம் கார்டு லாக் ஆகிவிட்டது. இதனால் வெறுப்படைந்த அவர் அந்த ஏ.டி.எம் கார்டை உடைத்துப் போட்டுவிட்டார். கையில் பணம் இல்லாததால் காஞ்சிபுரத்தில் இரவு முழுக்க வலம் வந்தார். கடைசியில் குமரகோட்டம் பகுதியில் உள்ள முருகன் கோயிலிலில் படுத்து உறங்கிவிட்டார். கோயில் வாசலில் வயதானவர்கள் பிச்சை எடுப்பதை கண்ட அவரும் அங்கேயே உட்கார்ந்து பிச்சை எடுக்கத் தொடங்கினார்.

பிச்சை எடுத்த ரஷ்ய இளைஞர்

அவருக்கு இரக்கப்பட்டு கோவிலுக்கு வந்தவர்கள் பணத்தைப் போட்டார்கள். தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி காவல் நிலைய காவலர்கள் அவரை விசாரணை செய்து, சென்னையில் உள்ள தூதரத்துக்கு அனுப்பினார்கள். அப்போது, அந்த இளைஞர் ரயிலில் ஏற்றிவிட வந்த காவலரிடம், இந்தப் பணம் செலவு ஆன பிறகு வந்தால், மீண்டும் பணம் கொடுப்பீர்களா? என்றார். ரஷ்ய இளைஞர் கேலி செய்வதாக எண்ணி அந்த காவலர் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.