ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது.

ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது.

UNESCO

‘யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக எடுத்திருக்கும் நிலைப்பாடுதான் இதற்குக் காரணம்’ என்று அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது உலக அளவிலும், ஐ.நா அமைப்புக்கு உள்ளும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த திடீர் முடிவு குறித்து யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் இரினா போகோவா, ‘யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுகிறோம் என்று எனக்கு அமெரிக்காவிடமிருந்து அதிகாரபூர்வமாக கடிதம் வந்துவிட்டது. இது எனக்கு மிகவும் மன வருத்தத்தை கொடுக்கிறது. இந்த முடிவு யுனெஸ்கோவுக்கு இழப்பு, அமெரிக்காவுக்கும் இழப்பு’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, பாலஸ்தீனத்தை அதன் முழு நேர உறுப்பினராக அங்கீகரித்தது. அப்போதே இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்த அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு கொடுக்கும் நிதியையும் நிறுத்திக்கொண்டது. பின்னர், அமெரிக்காவுக்கும் யுனெஸ்கோவுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில், யுனெஸ்கோவிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.