4 வயதில் மாதவிடாய் : விபரீத நோயினால் சிறுமி பாதிப்பு!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டு உடல்ரீதியாக பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளார்.

அவுஸ்ரேலியாவின் (New South Wales) நியூ சவுத் வேல்ஸ் ஐ சேர்ந்த Emily Dover என்ற சிறுமியே குறித்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார்.

4 வயதில் மாதவிடாய் : விபரீத நோயினால் சிறுமி பாதிப்பு!

பிறக்கும்போது நல்ல ஆரோக்கியமாக பிறந்த இந்த சிறுமிக்கு 4 வயது ஆகியபோது மாதவிடாய் ஏற்பட்டுள்ளது.

தற்போது, இந்த சிறுமிக்கு 5 வயதாகின்ற நிலையில் இரண்டு வயதாக  இருக்கும்போதே மார்பகங்கள் வளர்ந்து முகத்தில் பருக்கள் வர ஆரம்பித்துள்ளன.

4 வயதிலேயே பார்ப்பதற்கு மிகவும் முதிர்ச்சியடைந்து காணப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் கொண்டுபோய் சோதனை செய்ததில் இவருக்கு Addison’s disease இருப்பது என்று கண்டுபிடிக்கப்பட்டது.
அட்ரீனல் சுரப்பியானது, ஸ்டீராய்டு ஹார்மோன், கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டிரோன் ஹார்மோன்களை குறைந்த அளவே சுரக்கும்.

இது குறிப்பாக இளம் வயது பெண்கள் அல்லது 30 வயது பெண்களுக்கு ஏற்படும். சில நேரங்களில் சிறு வயதிலேயே பெண்கள் பருவமடைவதற்கும் காரணமாக அமைகின்றன.

தற்போது இந்த சிறுமிக்கு எடை அதிகரித்துள்ளதுடன்  இவரது உடம்பில் அதிகமாக முடி வளர்ந்து காணப்படுவதால் பள்ளிக்கு செல்வதற்கு சிரமப்படுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவரது உடலில் துர்நாற்றம் வீசுவதால், சிறு குழந்தைக்கான பருவத்தினை எனது மகளால் அனுபவிக்க முடியவில்லை இந்த சிறுமியின் தாய் கவலை வெளியிட்டுள்ளார்.