ஆருஷி கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை!

டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில், கடந்த 2008-ம் ஆண்டு பல் டாக்டர் தம்பதியான ராஜேஷ் – நூபுர் தல்வார் ஆகியோரின் மகள் 14 வயது ஆருஷியும், வேலைக்காரர் ஹேம்ராஜும் (45) படுகொலை செய்யப்பட்டனர். ஆருஷி, அவரது படுக்கையறையில் பிணமாகக் கிடந்த நிலையில், ஹேம்ராஜ் மொட்டை மாடியிலுள்ள தண்ணீர் டேங் அருகே கழுத்து அறுபட்டு கொலையுண்டுகிடந்தார்.

aaer_12572_15382

ஆருஷியும், ஹேம்ராஜூம் படுக்கை அறையில் அலங்கோலமான நிலையில் இருந்ததை ஆருஷியின் பெற்றோர் பார்த்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே இருவரையும் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்ததாக சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணையில், துப்பு துலங்காமல் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து சி.பி.ஐ. குழு நடத்திய விசாரணையில், ஆருஷியையும் ஹேம்ராஜையும் கொன்றது, ஆருஷியின் பெற்றோர்தான் என்பதற்கான ஆதாரங்கள் சிக்கின.

ஆருஷி வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், 2013-ம் ஆண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய காஸியாபாத் சி.பி.ஐ நீதிமன்றம், ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ்–நூபுர் தல்வார் தம்பதியே குற்றவாளிகள் என அறிவித்தது. மேலும், ஆருஷி-ஹேம்ராஜை கொன்ற குற்றத்துக்காக ராஜேஷ்–நூபுர் தல்வார் தம்பதிக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. 2016-ம் ஆண்டு நூபுர் தல்வார் சிகிச்சைக்காக மூன்று வாரங்கள் பரோலில் விடுவிக்கப்பட்டார்.