கர்ப்பிணி ஆசிரியைகள் புடைவை அணிந்து பணிக்கு வருவது கடினமானதாக காணப்படுவதனால், அவர்களுக்கு கவுண் வகையிலான விசேட ஆடை முறை ஒன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்று இலங்கை கல்வி அமைச்சினால் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
ஏனைய பல திணைக்களங்களில் இவ்வாறு கர்ப்பிணிப்பெண்கள் விசேட ஆடைகளை கர்ப்ப காலத்தில் அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஆசிரியைகளுக்கும் பொருத்தமான ஒழுக்கமான அடையை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது போன்று ஊழியர்களின் பிரச்சினைகளை ஊழியர் மட்டத்தில் இருந்து சிந்தித்து அதற்கு தீர்வுத்திட்டங்களை முன்வைக்கும் கல்விஅமைச்சின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதாகும்.