ஸ்காபுரோ ஏஜின் கோர்ட் தரிப்பிடத்தில் இம்மாதம் இரு இளைஞர்களை எரிவாயுவை ஊற்றி கிட்டத்தட்ட தீ வைக்கும் நிலைக்கு வந்த சம்பவம் நடந்துள்ளது. இது சம்பந்தமாக மூன்று சந்தேக நபர்களை தேடும் பொலிசார் அவர்களின் படங்களை வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் இரவு 9.17 மணியளவில் நடந்திருக்கின்றது.
18வயது மனிதன் வாகன தரிப்பிடத்தினூடாக நடந்து சென்று கொண்டிருக்கையில் மூன்று சந்தேக நபர்களால் எதிர் கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள்-இரு ஆண்கள் ஒரு பெண்-அனைவரும் 20 வயதுகள்.
வாதம் ஆரம்பித்ததாகவும் ஒரு கட்டத்தில் சந்தேக நபர்களில் ஒருவர் வாகனத்திற்கு சென்று எரி வாயு கொண்ட தகரம் ஒன்றை வெளியே எடுத்தார்.
பாதிக்கப்பட்ட இருவர் மீதும் எரிவாயுவை ஊற்றி தீ வைக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முயற்சி வெற்றியளிக்கவில்லை.
மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் பிறவுன் நிற ஆண் 5.7அல்லது 5.10 உயரம் கறுப்பு முடி தாடி கொண்ட தோற்றம் உடையவர்.கடைசியாக காணப்பட்ட போது மரூன் நிற சுவெட்டர் இருண்ட நிற காற்சட்டை மற்றும் கிரே நிற சப்பாத்து அணிந்திருந்தார்.
இரண்டாவது சந்தேக நபர் பிறவுன் நிற ஆண் 5.7 முதல் 5.10ற்கு இடைப்பட்ட உயரம் கறுப்பு முடி மற்றும் தாடி வைத்தவர்.கிரே நிற கட்டை கை ஹ_டி இருண்ட நிற காற்சட்டை வெள்ளை சப்பாத்து அணிந்திருந்தார்.
மூன்றாவது சந்தேக நபர் ஒரு பெண். 5முதல்5.5அடி உயரம் கறுப்பு தோள்-நீள முடி கொண்டவர். கறுப்பு அடிடாஸ் டிரக்காற்சட்டை ஒரு செங்குத்தான கோடு கொண்ட நீண்ட கைகள் கொண்ட கிரே நிற சுவெட்டர் மற்றும் திறந்த சான்டில்ஸ் அணிந்திருந்தார்;.
இவர்களது படங்கள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இவர்களை அணுக வேண்டாம் எனவும் கண்டால் 911ஐ அழைக்குமாறும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.