ரஷ்யாவில் நடைபெறும் 19ஆவது உலக இளைஞர் விழாவில் புளொடின் இளைஞரணி பங்கேற்பு!!
19ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர் விழா இவ்வருடம் ரஷ்யாவில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் சொச்சி நகரத்தில் எதிர்வரும் 14/10/2017 தொடக்கம் 22/10/2017 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமகாலத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவுடன் கூடிய அரசியல் பணியில் தமது உறுப்பினர்களை உள்ளீர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பு தனது தூய அரசியல் நோக்கில் செயற்படுகின்றது.
அந்த வகையில் இவ் மாநாட்டில் பங்கேற்பதற்காக புளொட் அமைப்பின் சார்பில் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவரும் ஆசிரியருமான திரு சு.காண்டீபன் அவர்கள் வட மாகாணத்தின் பிரதிநிதியாகவும், கிழக்கு மாகாண பிரதிநியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அவர்களின் செயலாளரும் ஆசிரியர் திரு சு.ஜெயமுரளி ஆகிய இருவரும் கலந்து சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.