சிறைக்கு செல்லும் வழியில் என்ன நடந்தது?? நெடுஞ்சாலையில் குங்குமத்தை இட்டுக் கொண்ட சசிகலா..!!

சிறைக்கு செல்லும்போது குழந்தைக்கு பெயர் வைத்த சசிகலா!!! சிறைக்கு செல்லும் வழியில் என்ன நடந்தது?? நெடுஞ்சாலையில் குங்குமத்தை இட்டு கொண்ட சசிகலா..!! எடப்பாடியும் சசிகலாவும் ஒரேநேரத்தில் பெயர்களை சூட்டியுள்ளனர்..அங்கே விஷ்ணு இங்கே ராமச்சந்திரா

54038ec8-c523-41be-af66-61936733313c_17060

வண்டலூர் உயிரியல் பூங்கா சிங்கக் குட்டிக்கு, ‘விஷ்ணு’ என முதல்வர் எடப்பாடி பெயர் வைத்துக்கொண்டிருந்த அதேநேரம்  காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு குழந்தைக்கு, ‘ராமச்சந்திரா’ எனப் பெயர் சூட்டினார் சசிகலா.

சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு அக்ரஹாரா சிறையில் தண்டனைபெற்று வந்த சசிகலா, ஹாஸ்பிட்டலில் இருக்கும் தனது கணவர் நடராசனைப் பார்ப்பதற்காகக் கடந்த 6-ம்தேதி சென்னை வந்தார்.

பெங்களூரு சிறையிலிருந்து காரில் வந்த சசிகலாவை, வழிநெடுகிலும் தொண்டர்கள் ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் அதிரடியாக வரவேற்பு செய்தனர்..

தி.நகரில் தங்கியிருந்த அவர்,  காலை மீண்டும் பெங்களூரு சிறைக்கு காரிலேயே சென்றார். சசிகலா வருகைக்காக தொண்டர்களான சண்முகானந்தம், அவரது மனைவி பாக்கியப்பிரியா ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் பகுதியில் காத்திருந்தார்.

பெற்றோர்கள் நின்றிருக்கும் தகவல் சசிகலாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நின்றிருப்பதைக் கண்ட சசிகலா, காரை நிறுத்திப் பேசினார்.

அவர்களின் குழந்தைக்கு ‘ராமச்சந்திரா’ எனப் பெயர் வைத்தார். காமாட்சியம்மன் படத்தையும், காமாட்சி அம்மன் குங்குமத்தையும் அந்தத் தம்பதியினர் சசிகலாவுக்கு பரிசாக அளித்தனர்

அதை புன்னகையோடு பெற்றுகொண்டசசிகலா பெங்களூரு சிறைக்குப் புறப்பட்டார் சசிகலா.