மியான்மரில் ரோஹிங்யா மக்களை ராணுவம் தாக்கி வருகிறது. லட்சக்கணக்கானோர் மியான்மரிலிருந்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். வங்கதேசத்தை நோக்கி சென்றவர்களில் ரதேன்டாங் நகரத்தைச் சேர்ந்த யாசர் ஹூசைன் என்ற 7 வயது சிறுவனும் ஒருவன். யாஷரின் தந்தை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, மியான்மரில் வசிக்க முடியாத நிலையில் தாய் ஃபிரோஷா பேகம் குழந்தைகளுடன் வங்கதேசத்துக்குத் தப்பிச் செல்ல முடிவெடுத்தார்.
பள்ளிச் சீருடையில் வங்கதேசத்துக்குள் நுழைந்த சிறுவனைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். சிறுவனின் குடும்பத்துக்குத் தேவையான வசதிகளைச் செய்து தந்தனர். தற்போது, வங்கதேசத்தில் உறவினர்களிடம் யாஷர் குடும்பத்தினர் தங்கியுள்ளனர். தங்கையைச் சுமந்தவாறு, சகதி நிறைந்த பாதைகளில் யாஷர் நடப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.