பெரும் துயரங்களை எதிர்நோக்கி இந்தோனிஷிய முகாம்களில் தவிக்கும் ஈழத்தமிழர்கள்.

ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்தினால், இந்தோனிஷியாவின் மிலான் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் பெரும் துயரங்களை எதிர்நோக்கி வருவதாக அழுது புலம்பியுள்ளனர்.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான உதவிகள் இல்லாமலும் கவனிப்பார் இன்றியும் தமது பிள்ளைகளுடன் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டதாகவும் அவர்கள் கண்ணீர்மல்க கூறுகின்றனர். நோய்கள் ஏற்பட்டால் சிகிச்சைகள் கூட மறுக்கப்படுவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஏனைய நாடுகளைச் சேர்ந்த அகதிகள், மேற்குலக நாடுகளில், ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளினால் குடியமர்த்தப்படுகின்றனர். ஆனால் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக தங்களை தொடர்ந்தும் அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் முறையிட்டுள்ளனர்.

Capturegfse (1)

பலர் தாயகத்தில் தங்கள் குடும்பங்களை விட்டு தனியாக வந்துள்ளனர். அவர்கள் எந்தவிதமான தொடர்புகளும் இன்றி தவிக்கின்றனர். தங்களில் பலருக்கு மன நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் வேறு சிலர் நடைப்பிணமாக திரிவதாகவும் கூறி அவர்கள் அழுது புலம்புகின்றனர்.

முதல் இரண்டு வருடங்கள் கைதிளுடன் சேர்த்து, விசேட முகாம் ஒன்றில் அடைத்து வைத்திருக்கப்பட்டதாகவும் பின்னர் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டு வெளியில் உள்ள சிறப்பு முகாம் ஒன்றில் முன்று ஆண்டுகள் தங்கவைக்கப்பட்டு சித்தரவதைக்கு உள்ளாகுவதாகவும் அவாகள் கண்ணீர்மல்க கூறுகின்றனர்.

Capturedgxzஈழத் தமிழர்களில் பலருக்கு ஐ.நா அதிகாரிகளினால் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் சிகிச்சைகள் கூட மறுக்கப்படுகின்றன. பலர் காயங்களுடன் எந்தவிதமான சிகிச்சைகளும் இன்றி அவதிப்படுகின்றனர்.
அவர்கள் தாயகத்துக்குக் கூட திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

தங்களுக்கு அகதி அந்தஸ்த்து வழங்குமாறு வலியுறுத்தி அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியபோது, மாற்று நடவடிக்கை எடுப்பதாக ஐ.நா அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர். ஆனால் இதுவரையும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் தாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பாக அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டவர்களுக்கு வேறு நாடுகளில் தஞ்சமளிக்க வேண்டும் எனவும் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் வேறு நாடுகளில் குடியமர அனுமதிக்குமாறு வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களின் அவல வாழக்கை தொடர்பாக கவணம் செலுத்தி, தங்கள் எதிர்கால வாழ்க்கையில் ஒளியேற்றுமாறு அவர்கள் புலம்பெயர் தமிழர்களிடமும் உருக்கமான வேண்டு கோள் விடுத்துள்ளனர். சேறு சகதிகள் நிறைந்த, மலசல கூட வசதிகள் அழுக்காக உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் வேதனைடன் கூறுகின்றனர்.

மனித சமூகம் இருக்க முடியாத இடத்தில், சுமார் ஐந்து ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த அகதிகள் தாயகத்தில் இருந்து படகுகள் மூலம் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.