மாமனாருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சமந்தா! மகிழ்ச்சியில் நாகார்ஜுன்

நடிகை சமந்தா தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு சினிமாவிலும் ரசிகர்களின் மனதை ஈர்த்தவர். முதல் காதல் ஒத்துப்போகவில்லை என்றாலும் நாக சைதன்யாவுடனான 2 ம் காதல் அவருக்கு கைகொடுத்தது.

201702240338440878_Nagarjunas-younger-son-married-the-actress-Samantha-Shock_SECVPF

ஆரம்பத்தில் இக்காதலுக்கு சைதன்யா வீட்டில் எதிர்ப்பு. ஆனாலும் பொறுமையாக இருந்து இருவரும் தற்போது காதலில் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

சமந்தாவின் குணங்கள் மாமனார் நாகார்ஜுனாவுக்கு பிடித்து போக ஓகே சொல்லிவிட்டார். அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்.

அக்டோபர் 6,7 ல் இரு மத முறைப்படி கோவாவில் நடைபெற்ற இவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

 

தற்போது சமந்தா ருத்பிரபு என்றிருந்த தன் பெயரை சமந்தா அக்கினேனி என சைதன்யா வீட்டு வழக்கப்படி மாற்றிக்கொண்டாராம். இதனால் மாமனார் வீட்டில் மகிழ்ச்சி கலை கட்டியுள்ளது.