நாம் தமிழர் விழாவின் தொடக்க நிகழ்வு சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் bolligen எனும் இடத்தில் கடந்த 26ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் முதலில் தமிழீழ தேசிய கொடியும், பின்னர் நாம் தமிழர் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டு விழா இனிதே நடைபெற்றது.அத்துடன், விழாவினை சிறப்பிக்க தமிழகத்திலிருந்து இயக்குனரும், தமிழ் நாட்டு இயக்குனர் சங்க செயலாளருமாகிய சு.மு. செல்வமணி, இயக்குனரும், நாம் தமிழர் மாநில இளைஞர் பாசறை செயலாளர் ஜெகதீச பாண்டியன் மற்றும் வழக்கறிஞரும், நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை செயலாளர் இராஜீவ் காந்தி எனும் அறிவுச்செல்வன், சமூக ஆர்வலர் பொன்.சந்திரன், அருட் தந்தை முனைவர் செல்வன் அருள்நாதன், முனைவர் சுபாஷ்சந்திரா, இளந்தமிழர் புகழேந்திமாரன் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, நாம் தமிழர் சுவிட்சர்லாந்தின் ஒருங்கிணைப்பாளராக விஸ்வலிங்கம் இளங்கோ தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்தும் நாம் தமிழர் சுவிட்சர்லாந்தின் 12 கொள்கைகள் அடங்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்த இந்த எட்டு உறுப்பினர்களும் தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக ஐக்கிய நாடுகள் சபையின் 36 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பங்குபற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது