கர்நாடகாவில், காங்.,கைச் சேர்ந்த சித்த ராமையா முதல்வராக உள்ளார். மாநிலத் தலைநகர் பெங்களூரில் பல சாலைகள், குண்டும், குழியுமாக இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சமீப காலத்தில், நான்கு பேர் சாலை விபத்து களில் உயிரிழந்து உள்ளனர். இதற்கு மக்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைஅடுத்து, இரு வாரங்களில், பெங்களூரு நகர சாலைகளை சீரமைக்கும்படி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், குண்டும் குழியுமாக சாலைகள் இருப்பதை கண்டிக்கும் வகையிலும், அவற்றை விரைவில் சீரமைக்க கோரிக்கை விடும் வகையிலும், மாடல் அழகி ஒருவர், புதுமையான போராட்டம் நடத்தியுள்ளார். பிரதான சாலை ஒன்றில், தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில், கடற்கன்னி போன்று வேடமணிந்த அந்த பெண் அமர்ந்து, தன் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.