அரசியல் கைதிகளுக்கான நல்ல தீர்வை அறிவிப்பாரா: யாழ் வரும் ஜனாதிபதி!

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் ஜனாதிபதியிடம் தமக்கான தீர்வை நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40) கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30) நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோர் கடந்த 25 ஆம் திகதியில் இருந்து இன்று வரை 20 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

59e180a17ea9e-IBCTAMIL
மேற்குறித்த அரசியல் கைதிகள் மூவரும் வவுனியாவில் நடைபெற்ற தமக்குரிய வழக்கை அனுராதபுரத்துக்கு மாற்றியமையை கண்டித்து குறித்த வழக்கை மீண்டும் வவுனியா அல்லது யாழ்ப்பாணத்துக்கு்மாற்றுமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தை தொடர்கின்றனர்.

இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ் அரசியல் தலைவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கோரி தொடர்சியான போராட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் யாழ் வரும் மைத்திரி தமக்கான நல்ல தீர்வினை அறிவிப்பார் என அரசியல் கைதகளும் அவர்களது உறவுகளும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்