மைத்திரியின் பதவிக்கு ஆப்பு வைக்க முதல் முயற்சியை ஆரம்பிக்கிறார் மஹிந்த!

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கட்சி தொடர்பிலும், அவரால் வழங்கப்பட்ட வேட்பு மனு குறித்தும் சட்டப் பிரிவுகளை கையிலெடுத்து அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (26)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்னச் சின்னத்தில் 2015ஆம் ஆண்டு போட்டியிட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும், லிட்ரோ எரிவாயு நிறுவன முன்னாள் தலைவருமான சஷீல முனசிங்க தாய்வான் வங்கி மோசடியில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் எதிர்வரும் நாட்களில் எடுக்கவுள்ள அதிரடி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அடுத்தவாரம் கொழும்பில் கூடவுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் எதிர்வரும் 17ஆம் திகதி மாலை 6.30 அளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கொழும்பில் விஜேராமயவிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது.

சஷீல முனசிங்க ஒரு பிரித்தானியப் பிரஜை என்பது இரகசிய பொலிஸார் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக அவரது கட்சி எவ்வாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்பதுடன், அந்தக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரது தற்போதைய பதவி செல்லுபடியாகும் தன்மை, சட்டரீதியில் காணப்படுகின்ற சிக்கல்கள் உள்ளிட்ட பல விடயங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறியமுடிகின்றது.

அதேபோன்று எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஒன்றிணைந்த எதிர்கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டாக போட்டியிடுவது தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது ஆராயப்படவுள்ளது.