தாதியை பாலியல் பலாத்காரம் செய்த இந்திய தொழிலதிபர்! மூன்று பிரம்படி, ஏழு மாத சிறை தண்டனை!

சிங்கப்பூரில்  தாதியொருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்திய தொழிலதிபருக்கு மூன்றுபிரம்படி மற்றும் ஏழு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

paaliyal

பிள்ளை ஷ்யாம் குமார் சதாசிவன்  இந்தியாவைச் சேர்ந்தவர் , இவர் துபாயில் இரும்பு விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். மனைவியின் சிகிச்சைக்காக கடந்த ஆண்டு சிங்கப்பூர்  வந்த பிள்ளை ஷ்யாம்  மனைவியை கவனித்துக் கொள்ள இளம் வயது தாதியொருவரை  நியமித்துள்ளார்.

இந்நிலையில் ஷ்யாம் குமார் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவமானப்படுத்தியதாகவும்,  குறித்த தாதி சிங்கப்பூர் பொலிஸில் புகார் கொடுத்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷ்யாம் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப் பட்டார்.

இந்த வழக்கு சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணையில் குற்றம் செய்ததை பிள்ளை ஷ்யாம் ஒப்புக் கொண்டார்.

குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து  அவருக்கு மூன்று பிரம்படி, ஏழு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.