வெளிநாட்டு அண்ணனுக்கு பெண் பார்த்த தம்பி!! நிச்சயம் முடிக்கும் தறுவாயில் பெண்ணுடன் ஓட்டம்!

தனது அண்ணனுக்கு பெற்றோருடன் பெண் பார்த்து திரிந்த தம்பி அண்ணனுக்குப் பார்த்த பெண்ணுடன் ஓட்டமெடுத்தார். அளவெட்டிப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. லண்டனில் வதிவிட உரிமை கொண்ட தனது மகனுக்கு தமது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையே பெற்றோர் நிச்சயம் செய்திருந்தனர். கந்தசட்டி விரதம் முடிந்த பின்னர் கலியாணம் என நாளும் குறிக்கப்பட்டிருந்தது. அண்ணன் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வரவிருந்த சமயம் பெற்றோருடன் அளவெட்டியில் வசித்து வந்த தம்பி குறித்த பெண்ணுடன் தலைமறைவாகியுள்ளார்.

odamm-680x365

பெண்ணை நிச்சயம் செய்ய பெற்றோர் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற போது தம்பியும் அவர்களுடன் சென்று சம்மந்தக் கலப்பில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது. பெண்ணும் தம்பியும் ஒரே வயதுடையவர்கள் என்பதுடன் ஒரே பாடசாலையில் கல்வி கற்றவர்கள் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஹயஸ்வான் சேவையில் ஈடுபடும் தம்பிக்கு லண்டனில் இருந்து உழைத்து வாகனம் வாங்க காசு கொடுத்ததே அண்ணன்தான் எனவும் தெரியவருகின்றது.

தற்போது இந்தச் சம்பவத்தால் லண்டன் அண்ணனின் பெற்றோர் கடும் விரக்தியிலும் அவமானத்திலும் உள்ளதாகவும் தம்பியின் செயல் தொடர்பாக அயலவர்களும் கடும் விசனம் தெரிவித்துள்ளதாகவும் அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.