இலங்கையில் இணைய தொடர்பாடல் செயலிகளான வைபர் – வட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கையடக்க தொலைபேசியில் வைபர், வட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்தும் போது அவற்றிற்கான தரவு மற்றும் கடவுச்சொற்களை ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என இலங்கை கணனி அவசர பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேறு நபர்களின் தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்தி போலியான தொலைபேசி செயலிகள் இயக்கப்படுகின்றமை தொடர்பில் இதுவரையில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
அதற்கமைய இவற்றினைப் பயன்படுத்தும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என கணனி அவசர பிரிவின் தகவல் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
இந்த போலி கணக்குகளை பயன்படுத்தி பல்வேறு குற்றங்களை மேற்கொள்ள முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த தகவல்களை வேறு எந்த ஒரு நபரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என ரொஷான் சந்திரகுப்தா குறிப்பிட்டுள்ளார்.