வீடொன்றில் இருந்து இறந்த நிலையில் இளம் ஜோடியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட இருவரும் திருமணமான கணவன் , மனைவியெனவும் அவர்களின் வீட்டிலிருந்தே இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அனுராதபுரம், விகாரை – ஹல்மில்லகுளம் பகுதியிலுள்ள வீட்டலிருந்து பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் மூலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இளம் ஜோடியின் மரணத்திற்கான காரணம் தெரியவில்லையெனவும் இவர்கள் இருவரும் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலைசெய்யப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அனுராதபுரம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.