அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி ரத்தான போதும், இந்திய வீரர்கள் வித்தியாசமான முறையில் பயிற்சி மேற்கொண்டு ரசிகர்களுக்கு விருந்தளித்தனர்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெறவிருந்தது.
ஆனால் போட்டி நடக்க இருந்த மைதானத்தில் நேற்று அதிகமான மழை பெய்ததால், மைதானத்தை தயார் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
நீண்டநேரமாகியும் மைதானத்தை முழுமையாக தயார் செய்ய முடியாத காரணத்தினால், விளையாடுவது மிகவும் ஆபத்தானது என கருதி, நடுவர்கள் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தனர்.
இந்நிலையில் மைதானத்தை தயார் செய்யும் வேளையின் போது, இந்திய வீரர்கள் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது வழக்கமாக வலது கை துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும், இடது கையில் துடுப்பெடுத்து ஆடினர்.
இதில் அணியின் தலைவர் கோஹ்லி, ரோகித் சர்மா முதலில் விளையாடினர். அதன் பின் இதில் டோனி இணைந்து கொண்டு இடது கையில் ஆடினார். இதைக் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.