சங்குப்பிட்டிப் பாலத்தில் ஐஸ்கிறீம் குடித்து நோயளர்களுடன் விளையாடிய அம்புலன்ஸ்!

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி நோயாளிகளை ஏற்றிச்சென்ற அன்புலன்ஸ் வண்டி  பூனகரிசங்குப்பிட்டி பாலத்திற்கு அருகே (பாதசாரிகள் கடவையில்) நேற்றையதினம் (13.10) மதியம்

4684d329c98a9cfa9708de647ec27728

1.30மணியளவில் அன்புலன்ஸ் வண்டியினை நிறுத்தி விட்டு  வீதியில் ஜஸ்கிறிம் வாங்கிசாப்பிட்ட வவுனியா வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

நோயாளிகள் அன்புலன்ஸ் வண்டியில் இருக்கும் புகைப்படமும்  அன்புலன்ஸ் வண்டியின் சாரதி ,வைத்தியர்கள் , வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஜஸ்கிறிம் சாப்பிடும் புகைப்படமும் ,அன்புலன்ஸ் பாதசாரிகள் கடவையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இவ்விடயம் தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில்,நோயாளிகளுடன் அன்புலன்ஸ் வண்டியினை பாதசாரிகள் கடவையில் நிறுத்தி விட்டு ஜஸ்கிறிம்சாப்பிடுவது வன்மையாக  கண்டிக்கத்தக்கது.

சங்குப்பிட்டியூடாக அதிவேகமாக வாகனங்கள் செல்கின்றன. ஏதேனும் ஒரு வாகனம் அன்புலன்ஸ் வண்டியுடன் மோதி விபத்துக்குளானால் நோயாளிகளின் உயிருக்கு யார் உத்தரவாதம் வழங்குவது.

இவ்வாறான வைத்தியசாலையின் சில உத்தியோகத்தர்களின் செயற்பாடு வைத்தியசாலையின் சமுகத்தினையே பாதிப்பதாகவும் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் வீதியில் நின்ற பேரூந்தின் மீது மோட்டார்  சைக்கில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஜஸ்கிறிம் சாப்பிடுவது தவறில்லை . நோயாளிகளுடன் அன்புலன்ஸ் வண்டியினை பாதாசாரிகள் கடவையில் எவ்வித சமிஞ்சை விளக்குகளும் போடமால் நிறுத்தி விட்டு ஜஸ்கிறிம் சாப்பிடுவதே தவறாகும்.

சைட்டம் வந்தால் நோயாளிகளின் உயிர் ஆபத்தில் என கூச்சலிடும் வைத்தியர்களே நீங்களும் சற்று சிந்தித்து செயற்படுங்கள்