தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையையடுத்து, களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அப்பகுதியைச் சூழவுள்ள மக்கள் அது குறித்து விழிப்புடன் இருக்குமாறு பேரிடர் முகாமைத்துவ நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, சற்று முன் வீசிய பலத்த காற்றினால், மொறட்டுவை, ராவத்தாவத்தையில் மரம் ஒன்று சரிந்து விழுந்ததில், கொழும்பு – காலி பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மலைநாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதால், ஹட்டன்-நுவரெலியா மற்றும் கொழும்பு-ஹட்டன் வீதிகளில் பயணிக்கும் மோட்டார் வாகனச் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்திச் செல்லுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.