தேர்தல்களில் சுயேட்சைகள் போட்டியிட தடை..? : மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தேர்தல்களில் சுயேட்சைகள் போட்டியிடுவதற்கு தடை விதிப்பது குறித்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

19travel-rb3

தேர்தல்களில் சுயேட்சைகள் போட்டியிடவும், ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளில் போட்டியிடவும் தடை செய்யக்கோரி உச்ச நீதி மன்றத்தில் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், தேர்தல்களில் சுயேட்சைகள் போட்டியிடுவதால் வாக்குகள் சிதறுவதாகவும், அதனால் தேர்தலின் அமைப்பே பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு தொகுதியில் ஒருவர் போட்டியிட்டால், இரண்டிலும் வெற்றி பெறும் பட்சத்தில் ஒன்றை ராஜினாமா செய்கிறார். அதனால் அரசுக்கு வீண் செலவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் ஆகியோர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.