திமுகவின் தலைவரும், இந்தியா கண்ட முதுபெரும் அரசியல் ஆளுமைகளில் ஒருவருமான திராவிடத் தலைவர் கலைஞர் கடந்த வருடம் முதலே தனது இயல்பான அரசியல் பணிகளில் ஈடுபடவில்லை அதற்கான காரணம் கடந்த 90 வருடங்களாக ஓயாமல் செயல்பட்டுக்கொண்டிருந்த உடல் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பதுவே காரணம்.
தினமும் முரசொலியில் உடன்பிறப்பே என அவர் அழைத்து எழுதும் கடிதங்களையும், அரசியல் எதிர் முகாம்களில் உள்ளவர்க்கு அவர் அளிக்கும் அறிக்கைகளையும் தாங்காமல் வெளிவந்த பத்திரிக்கைகளை உள்ளபடியே ஆர்வமில்லாமலே புரட்டியிருப்பார்கள் திமுகவினர்.
நெஞ்சு சளியின் காரணமாக ட்ரக்யோஸ்டமி சிகிச்சை மேற்கொண்டுள்ள அவர், நோய்த்தொற்று ஏற்படக்கூடுமென பொது நிகழ்வுகளில் எதனிலும் கலந்துகொள்ள வேண்டாமென அறிவுறுத்தியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.
மாற்றுக்கருத்துக்கள் பல இருப்பினும் காஞ்சித்தலைவன் அண்ணா கண்ட சமத்துவ சமூகம் அமைந்திட அரசு இயந்திரத்தை பயன்படுத்தியவர் என்பதில் பிழையேதுமில்லை. அப்படியான அரசியல் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதி அவர்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார். தனது பேரப்பிள்ளைகளுடன் அவர் விளையாடி மகிழும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதனை ஆர்வத்துடன் பகிர்ந்துவருகின்றனர் திமுகவினர்.