புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான குற்றவாளிக்காக அனைத்து புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக நினைக்கக்கூடாது என்று பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சுவிஸ்குமார் என்ற தனி மனிதன் மிகக் கொடூரமாக செயற்பட்டமையால் அவரைப்போல புலம்பெயர் தேசங்களில் வழும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் குற்றம் சுமத்த முடியாது என்று சிங்கள வார மலர் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,
”சுவிஸ்குமாரின் குற்றங்களை புலம்பெயர் தமிழர்கள் மீது போட முடியாது, ஏனெனில் இவ்வாறான குற்றங்கள் எங்கு வேண்டுமானாலும் நடக்கும். குறித்த கொலைச் சம்பவத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட சுவிஸ்குமார் தொடர்பில் பல்வேறு கதைகள் பேசப்பட்டன. புலம்பெயர் தமிழர்களுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பதாகவும், முன்னாள் சனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சியுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும் பல்வேறுபட்ட செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனாலும் தற்பொழுது சுவிஸ் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சுவிஸ்குமார் இங்கிருந்து சென்று சுவிஸ் நாட்டில் வசித்தவர் என்பதற்காக அங்கிருக்கும் ஏனைய தமிழ் மக்களையும் குற்றவாளிகளாக கருதிவிட முடியாது” என்று பசில் ராஜபக்ஷ இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.