இன்றைய ராசிபலன் (15.10.2017)

இன்றைய ராசிபலன்  (15.10.2017)

  • மேஷம்

    மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபா ரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. வெற்றிக்கு வித்திடும் நாள்.

  • கடகம்

    கடகம்: காலை 8.53 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல் இருங்கள். நண்பகல் முதல் சோர்வு நீங்கி சுறுசுறுப்பா வீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: காலை 8.53 மணி முதல் ராசிக்குள் சந்தி ரன் நுழைவதால் வேலைச் சுமையால் பதட்டம் அதிகரிக் கும். கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வேலை யாட்களால் விரயம் வரும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: எதிர்பார்த்த காரியங்கள் அலைச்சலின் பேரில் முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். போராடி வெல்லும் நாள்.

  • துலாம்

    துலாம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: பிரச்னைகளை சமாளிக்கும் மனோ பலம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கனவு நனவாகும் நாள்.

  • தனுசு

    தனுசு: காலை 8.53 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதனால் பழைய நினைவு களில் மூழ்குவீர்கள். நண் பகல் முதல் கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். அரைக்குறையாக நின்ற வேலை கள் முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

  • மகரம்

    மகரம்: காலை 8.53 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும் பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களிடம் நயமாக பேசுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோ தர வகையில் உதவிகள் கிட்டும். விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • மீனம்

    மீனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.