பிரித்தானியாவின் லண்டன் மூன்று இளைஞர்கள் கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
Bridge station பகுதியில் லண்டன் நேரப்படி இன்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கத்தி குத்து சம்பவம் மோதல் ஒன்றின் பின்னரே இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,
”இருபது வயதிற்கு உட்பட மூவர் இவ்வாறு கத்தி குத்துக்கு இலக்காகியுள்ளனர். அவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த கத்திக்குத்துச் சம்பவத்தால் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் காயங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.