உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள கைதிகள் மூவரும் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 25 ஆம் திகதியில் இருந்து இன்று வரை 20 ஆவது நாளாக அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த இராசதுரை திருவருள் (வயது 40) கரணவாயை சேர்ந்த மதியரசன் சுலக்ஸன் (வயது 30) நாவலப்பிட்டியை சேர்ந்த கனேசன் தர்சன் (வயது 26) ஆகியோர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றையதினம் அவர்கள் உடல் நிலைமை மோசமடைந்த நிலையில் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இந்நிலையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே யாராவது உறுதியாக பொறுப்பெடுத்து அவர்களின் போராட்டத்தை நிறுத்தசொல்லுமாறு அரசியல் கைதிகளின் உறவுகள் இன்று கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர்.