வியட்நாமில் சமீபத்தில் ஏற்பட்ட பெரும்வெள்ளத்தின் போது 20 அடி பைத்தான் மீது குழந்தை ஒன்று சவாரி செய்துள்ள காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகியுள்ளது.
வியட்நாமில் சமீபத்தில் பேய் மழையும் பெரு வெள்ளமும் ஏற்பட்டது, இதில் பெரும்பாலான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த நிலையில் 20 அடி மலைப்பாம்பின் மீது குழந்தை ஒன்று சிரித்தவாறே அதன் மீதேறி சவாரி செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Truong என்ற அந்த சிறுவன் மிகுந்த உற்சாகத்துடன் குறித்த பாம்பின் மீது சவாரி செய்கிறான். அவர்களது குடியிருப்பானது மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ள நிலையில், குறித்த சிறுவனின் இந்த சவாரி நடந்துள்ளது.
ஆனால் குறித்த காட்சிகள் பொய் என்றும் இது ஜோடிக்கப்பட்டது எனவும் சில பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதனை மறுத்துள்ள சிறுவனின் குடும்பத்தினர், குறித்த 20 அடி பைத்தானை தாங்கள் வளர்த்து வருவதாகவும், சிறுவன் சவாரி மேற்கொண்டது உணமை சம்பவம் எனவும் தெரிவித்துள்ளனர்.
80 கிலோ எடை கொண்ட குறித்த பைத்தான் அவர்களது குடியிருப்பில் கடந்த 4 ஆண்டுகளாக வளர்க்கப்பட்டு வருவதாகவும், சிறுவன் Truong(3) பிறந்ததில் இருந்தே அதனுடன் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளான் எனவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.