பேருவளையை சேர்ந்த 15 வயதான மாணவியை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 25 வயதான இளைஞனை பிரதேசவாசிகள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பாடசாலை சீருடையில் இருந்த மாணவியை பாழடைந்த வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 5 மணிநேரம் பாழடைந்த வீட்டில் மாணவியை வைத்திருந்து விட்டு, பாடசாலை விடும் நேரத்தில் இளைஞன், மாணவியை பாடசாலைக்கு அருகில் அழைத்து வந்து விட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பிரதேசவாசிகள் இளைஞனை பிடித்துள்ளனர்.
குறித்த மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக நாகொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். பேருவளை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.